×

தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி, பீகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மத்திய பிரதேசத்தில் நான்கு முறை பாஜ ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5 மாநில தேர்தலில் பாஜமிக பெரிய வெற்றி பெறும். மக்கள் நல திட்டங்கள் மூலம் மிக பெரிய வளர்ச்சி கொடுத்துள்ளோம். குஷ்பு, சேரி பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். சேரி என்றால் ஊர் என்று பொருள். சேரி என்பது அனைத்து பகுதி மக்களும் இருக்க கூடிய ஒன்றுதான். இந்த விவகாரத்தை விவாதிக்க தேவை இல்லாத ஒன்று என்று எண்ணுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Minister of State L. Murugan ,Chennai ,Bihar ,
× RELATED தலைமை உத்தரவிட்டால் மக்களவை...