×

பாரபட்சமற்ற முறையில் செயல்பட தவறிய பாக். அதிபர் அல்வியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெர்ஹிக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அல்விக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “பாகிஸ்தான்-தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு ஆதரவாக தனது அலுவலகத்தையும், அதிகாரங்களையும் அல்வி தவறாக பயன்படுத்தி உள்ளார். அதிபர் எந்த கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. ஆனால் அல்வி இம்ரான் கானின் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து மீறுகிறார். ஒருதலைபட்சமாக செயல்படும் ஆரிஃப் அல்வி அதிபராக நீடிக்க தகுதியற்றவர். அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

The post பாரபட்சமற்ற முறையில் செயல்பட தவறிய பாக். அதிபர் அல்வியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Pak ,President Alvi ,Supreme Court ,Islamabad ,Arif Alvi ,Pakistan ,Imran Khan ,Terhiq-e-Insab ,President of ,Dinakaran ,
× RELATED 400 தொகுதிகளை வென்றால்தான் பாக்....