×
Saravana Stores

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் நாளை நடக்கிறது: கார்த்திகை மகாதீபம் ஏற்றும் விழா: 150 மீ. காடா துணி, 10 டின் நெய் தயார்

குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ளது சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற 1117 படிகள் உயரம் கொண்ட ரத்தினகிரீஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று மலை உச்சியில் இருக்கும் ரத்தினகிரீஸ்வரர்ருக்கு சங்காபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்து சுவாமிக்கு வைரம் முடி கிரீடம் சாற்றும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொட்டும் மழையும் பாராது பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து நாளை மாலை திருவண்ணாமலை மகாகார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்தில் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலை உச்சியிலே கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது மலைஉச்சியில் தீபம் ஏற்றுவதற்கான வைக்கப்பட்ட கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. தீப திரிக்காக 150 மீட்டர் காடா துணி மற்றும் 10 டின் நெய் மலைஅடிவாரத்திலிருந்து பணியாளர்கள் மூலம் மேலே கொண்டு செல்லப்பட்டது. நாளை மாலை 6 மணிக்கு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து அய்யர்மலை சுற்றிலும் 4 கிலோ மீட்டருக்கு அகல் விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதே போல் தெப்பக்குளத்தை சுற்றிலும் அகல் விளக்குகள் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது தற்பொழுது தொடர் மழை காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிரம்பி வழிந்து உள்ளதால் இதனைப் போற்றும் வகையில் பக்தர்கள், பொதுமக்கள் இந்து அறநிலையத்துறை இடம் கார்த்திகை மாதத்தில் தெப்ப உற்சவம் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்து அறநிலையத்துறை அனுமதி பெற்றவுடன் கார்த்திகை மாதம் 29ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்….

The post அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் நாளை நடக்கிறது: கார்த்திகை மகாதீபம் ஏற்றும் விழா: 150 மீ. காடா துணி, 10 டின் நெய் தயார் appeared first on Dinakaran.

Tags : Ayyarmalai Rathinakriswarar Temple ,Mahadeepam ,Kulithalai ,Ratnakriswarar Temple ,Shiva ,
× RELATED அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில்...