×

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி 6 போலீஸ் அதிகாரிகள் பஞ்சாபில் சஸ்பெண்ட்

சண்டிகர்: பிரதமர் மோடி கடந்த ஆண்டு பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி காரணமாக 6 பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அங்குசென்றார். அவரது கார் பெரோஸ்பூர் பகுதி சாலையில் சென்றபோது விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக அங்குள்ள மேம்பாலத்தில் மோடியின் கார் 20 நிமிடங்கள் காத்திருந்தது.

அதனால் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு அவர் டெல்லி திரும்பினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு பின் கடந்த 26ம் தேதி எஸ்.பி. குர்பிந்தர் சிங் பஞ்சாப் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், டி.எஸ்.பிக்கள் பார்சன் சிங், ஜகதீஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜதிந்தர் சிங், பல்விந்தர் சிங், எஸ்.ஐ. ஜஸ்வந்த் சிங், ஏ.எஸ்.ஐ. ரமேஷ் குமார் ஆகிய 6 போலீஸ் அதிகாரிகளையும் பஞ்சாப் உள்துறை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

The post பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி 6 போலீஸ் அதிகாரிகள் பஞ்சாபில் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Punjab ,PM ,Chandigarh ,Modi ,
× RELATED சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம்...