×

நாங்கள் தலையிடாதவாறு சட்டம் இயற்ற வேண்டும் அரசியல் சாசனத்தை காப்பது ஆளுநர்களின் முதல் கடமை: ஜார்க்கண்ட் கவர்னர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி

சேலம்: ‘ஆளுநர்களின் முதல் கடமை அரசியல் சாசனத்தை காப்பது தான்’ என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நேற்று காலை சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தரிசனம் செய்தார். பின்பு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வருங்காலத்தில் நிச்சயமாக சேலம்-சென்னை 8 வழிச்சாலை மீண்டும் வரும். சேலம் மாநகரம் சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இணையாக வளர வேண்டும். இதற்கு நிச்சயமாக நல்ல திட்டங்கள் அனைத்தும் நடக்க வேண்டும். அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்பது தான், ஆளுநர்களின் முதல் கடமை. அரசியல் சாசனத்திற்கு மாறாக எந்த சட்டம் இயற்றப்பட்டாலும், அதை கிடப்பில் போட வேண்டியதும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்பதும், அட்டர்னி ஜெனரல் கருத்தை கேட்பதும், நிச்சயமாக ஒரு ஆளுநரின் கடமை ஆகும்.

நான் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பேன் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் கருத்திற்கு மாறாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 77 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை அங்கீகாரம் செய்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை. முதலமைச்சர் தான் அரசை நடத்துகிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், முதலமைச்சரும் ஏதோ தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்தினால், எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லது செய்யலாம் என்பதை அரசியல் சாசனம் அங்கீகரிக்கவில்லை. மக்கள் தான் எஜமானர்கள். ஆளுநர்கள் தலையிடாத வகையில், மாநில அரசுகள் சட்டங்களை இயற்ற வேண்டும். அப்போது நிச்சயமாக நாங்கள் உங்களோடு இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாங்கள் தலையிடாதவாறு சட்டம் இயற்ற வேண்டும் அரசியல் சாசனத்தை காப்பது ஆளுநர்களின் முதல் கடமை: ஜார்க்கண்ட் கவர்னர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Governor ,CP Radhakrishnan ,Salem ,CB Radhakrishnan ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...