×

மாற்று திறனாளி பெண் வியாபாரியின் கருவாடினை வீசிய விவகாரம்: சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் சஸ்பென்ட்

ராமநாதபுரம்: மாற்று திறனாளி பெண் வியாபாரியிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொண்ட புகாரில் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். சாயல்குடி பேருந்து நிலைய வாரச்சந்தையில் மாற்றுத் திறனாளி பெண் வியாபாரி விற்று வந்த கருவாட்டை கீழே கொட்டிய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடுள்ள அறிக்கையில்; இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றுத்திறனாளி வியாபாரியிடம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் கண்ணியக்குறைவான முறையில் நடந்து கொண்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிக்கிணங்க இன்று சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் .மா.சேகர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கபட்டுள்ளது.

The post மாற்று திறனாளி பெண் வியாபாரியின் கருவாடினை வீசிய விவகாரம்: சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் சஸ்பென்ட் appeared first on Dinakaran.

Tags : Shekhar Suspended ,Sayalkudi Municipality ,RAMANATHAPURAM ,Sayalkudi ,Shekar Suspended ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு தயாராகும் உப்பளங்கள்