×

கூடைப்பந்து வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

சேலம், நவ.26: சேலம் மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், கூடைப்பந்து வீரர்களுக்கு சீருடை, உபகரணங்களை வழங்கினர். திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சேலம் மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கூடைப்பந்து வீரர்களுக்கு, சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று சேலத்தில் நடந்தது. மத்திய மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநகர அமைப்பாளர் ஆனந்தகண்ணன் முன்னிலை வகித்தார். இதில், 40 கூடைபந்து வீரர்களுக்கு சீருடை மற்றும் கூடைப்பந்துகளை, ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார். தொடர்ந்து அவர், சிறப்பாக விளையாடி சாதனை படைக்க வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகர திமுக செயலாளர் ரகுபதி, பகுதி செயலாளர் பிரகாஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநகர துணை அமைப்பாளர்கள் செங்கமலை, நாகராஜ், நிர்வாகிகள் இமானுவேல் அந்தோணி, இன்சாத், பயிற்சியாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கூடைப்பந்து வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem City ,DMK Sports Development Team ,DMK ,Dinakaran ,
× RELATED மருமகனுக்கு வேலை வாங்கித் தருவதாக...