×

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ராசிபுரம், நவ.26: ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை ராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார். ராசிபுரத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, ராஜேஷ்குமார் எம்பி தொடங்கி வைத்தார். கலெக்டர் உமா தலைமை வகித்தார். முகாமில் ராஜேஷ்குமார் எம்பி பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ராசிபுரம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 74 பேர், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 93 பேர் என மொத்தம் 167 தூய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், தூய்மை பணியாளர்களுக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள், இருதய மருத்துவம், நுரையீரல், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பிரிவுகளும், ஹீமோகுளோபின், ரத்த வகை கண்டறிதல், சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, இ.சி.ஜி. ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் கவிதா சங்கர், நகர செயலாளர் சங்கர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் விநயாக மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் (பொ) சேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Medical Camp for Sanitation Workers ,Rasipuram ,Rajeskumar ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகளில் 13,570 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா