×

போலீஸ் குடியிருப்புகளை மாநகர கமிஷனர் ஆய்வு: தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

 

திருச்சி, நவ.26: திருச்சி மாநகாில் உள்ள போலீஸ் குடியிருப்புகளை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சி அதிகாரிகளிடம் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கண்டோன்மெண்ட் சரகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்தை நேற்று பார்வையிட்டார். அப்போது போலீசார் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், ‘அன்பான அனுகுமுறை” என்ற தலைப்பில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

அதோடு போலீசார் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்வதுடன் உரிய மருத்துவ பாிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்றார். பின்னா் பீமநகா் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்புகளை கமிஷனர் காமினி ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கமிஷனர் குடியிருப்புகளை சுகாதாரமாக பராமரிக்கவும், மாநகராட்சி ஊழியா்களை கொண்டு போலீஸ் குடியிருப்பை சுற்றியுள்ள குப்பைகள், செடி கொடி, புதர்களை அகற்றவும் கேட்டுக்கொண்டார்.

அதே போன்று திருச்சி மாநகரத்தில் உள்ள அனைத்து போலீஸ் குடியிருப்புகளையும் சுத்தம், சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ளவும், சேதமடைந்த குடியிருப்புகளை சாி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். போலீசார் மற்றும் அவா்கள் குடும்பத்தினாின் ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும் நடவடிக்கைகள் தெடா்ந்து எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தொிவித்தார்.

The post போலீஸ் குடியிருப்புகளை மாநகர கமிஷனர் ஆய்வு: தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Municipal Police Commissioner ,Kamini ,Trichy Manaka ,Dinakaran ,
× RELATED சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு