×

அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

 

அறந்தாங்கி, நவ.26: அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி, சிதம்பரவிடுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ), கட்டப்பட்டுவரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக எண்ணற்றத் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடற்ற ஏழை, எளிய பொதுமக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றையதினம் சிதம்பரவிடுதியில், ஜெயராணி என்பவரால் ரூ.2.66 லட்சம் மதிப்பீட்டில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் வீட்டின் கட்டுமானப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கட்டுமானப் பணிகளுக்கான தொகைகள் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் முறையாக வரவு வைக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க பயனாளிக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் இதுபோன்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், இந்திராகாந்தி, பலர் கலந்துகொண்டனர்.

The post அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Mercy Ramya ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கி வட்டத்தில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்