×

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

 

பொள்ளாச்சி, நவ.26: பொள்ளாச்சி மார்க்கெட்டில், திருக்கார்த்திகையையொட்டி நேற்று கூடுதல் விலைக்கு பூக்கள் விலைபோனது. இதில் மல்லிகை 1 கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும். மடத்துக்குளம், கணியூர் நிலக்கோட்டை, பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நாமக்கல், தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்தும் பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதில், வெளியூர்களில் அவ்வப்போது மழை காரணமாக, இந்த மாதம் துவக்கத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு அனைத்து பூக்களில் வரத்து குறைவாக இருந்ததுடன், தீபாவளிக்கு பிறகு மல்லிகையை தவிர பிற பூக்களின் விற்பனை மந்தமாக இருந்ததால், அந்த பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒருவாரமாக அவ்வப்போது சுப முகூர்த்த நாட்கள் என்பதால், மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக பூக்கள் வரத்து ஓரளவு இருந்தது. இதில், சுபமுகூர்த்த நாட்களையொட்டி கடந்த சில நாட்களாக பூக்களின் விலை பல மடங்காகி, அதிக கிராக்கி இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில் இன்று (26ம் தேதி) திருகா ர்த்திகை திருநாள் என்பதால், அனைத்து ரக பூக்களும் கூடுதல் விலைக்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.850 விற்பனையான மல்லிகை நேற்றைய நிலவரப்படி 1 கிலோ மல்லிகை ரூ.2000-க்கும், 650-க்கு விற்பனையான முல்லை மற்றும் ஜாதி முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்தி ரூ.400-க்கும், கோழிக்கொண்டை ரூ.180-க்கும், அரளி ரூ.300-க்கும், சில்லிரோஸ் ரூ.240 என கூடுதல் விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பொள்ளாச்சி மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi market ,Karthika Deepatri day ,Pollachi ,Thirukarthikai ,
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...