×

பில்லூர் – கெத்தை சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்

 

காரமடை, நவ.26: பில்லூர்-கெத்தை சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானை, மான், கரடி, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் காணப்படுகின்றன. குறிப்பாக தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இவை அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பில்லூரில் இருந்து கெத்தை செல்லும் சாலையில் சாலையின் ஓரமாக யானை கூட்டம் ஒன்று நேற்று குட்டியுடன் உலா வந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து கடும் அச்சமடைந்தனர். மேலும் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளனர்.

The post பில்லூர் – கெத்தை சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pillur-Kethi road ,Karamadai ,Western Ghats… ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...