×

கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

 

கோவை, நவ. 26: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெற்றதன் மூலம் 2 பேர் மறுவாழ்வு பெற்றனர்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ரோடு பழனியம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் குழந்தை வேல்(77). இவர், கடந்த 22ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை மருத்துவர்கள் பரிசோதனையில் உறுதி செய்தனர்.

மேலும், உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து மருத்துவர்கள் குழந்தைவேல் குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் குழந்தைவேலின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு ஒரு சிறுநீரகத்தை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகத்தை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும் சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதன்மூலம், 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவர்கள் குழந்தைவேலின் குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

The post கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Government Hospital ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...