×

கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவ முகாம்

திருப்புவனம், நவ.26: திருப்புவனம் அருகே சொட்டதட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.  சிவகங்கை மாவட்ட கடை கோடி எல்லையான சொட்ட தட்டியில் மருத்துவ முகாமை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ரேவதி சக்திவேல் முருகன் வரவேற்றார்.

திருப்புவனம் வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு தலைமையில் மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு மற்றும் மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது. சொட்ட தட்டி,சாயனபுரம், புலியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்தீஸ்வரி ஆறுமுகம்,சுப்பையா, ஈஸ்வரன், கட்சி நிர்வாகிகள் வசந்தி சேங்கைமாறன், நாகூர்கனி,தேவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் சக்திமுருகன் நன்றி கூறினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Artist ,Centenary ,Medical Camp ,Tiruppuvanam ,Tamil Nadu government ,Chottathati ,Artist Centenary ,
× RELATED தரமணியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு!!