பெரியகுளம், நவ. 26: பெரியகுளம் வராக நதிக்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகள், அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து வருவாய்த்துறையினர் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சார்பு ஆய்வாளர் அர்ஜூனன் தலைமையில் 30 வீரர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பெரியகுளம் நகராட்சியின் வைத்தியநாதபுரம், பட்டாளம்மன் கோவில் தெரு, கீழ வடகரைக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி, தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பங்களா பட்டி, ஜெயமங்கலம் சிந்துவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த குழுவினர் 28ம் தேதி வரை தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, தேனி, கம்பம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
The post பெரியகுளம் பகுதியில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.
