×

சென்னையில் பணியாற்றிய 3 உதவி கமிஷனர்கள் வெளி மாவட்டங்களுக்கு அதிரடி மாற்றம்

சென்னை: சென்னையில் பணியாற்றிய 3 உதவி கமிஷனர்கள் வெளி மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சென்னை திருவொற்றியூர் உதவி கமிஷனராக பணியாற்றிய முகமது நாசர், ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும், புழல் உதவி கமிஷனராக இருந்த ஆதிமூலம், செங்கல்பட்டு குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாகவும், வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனராக பணியாற்றிய இருதயம், சிவகங்கை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் பணியாற்றிய 3 உதவி கமிஷனர்கள் வெளி மாவட்டங்களுக்கு அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,DGP ,Shankar ,Dinakaran ,
× RELATED போலீசாருக்கான மகிழ்ச்சி திட்டம்...