×

ஆற்றில் மூழ்கி காவலர் பலி

பந்தலூர்: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (25). தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய இவர், நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கேரள- தமிழக எல்லைப்பகுதில் உள்ள சோலாடி சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்தார்.இவர், நேற்று சோலாடி சோதனைச்சாவடி அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றபோது பாறையில் இருந்து வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த அடி ஏற்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த நீலகிரி எஸ்பி சுந்தர வடிவேல் சோலாடி சோதனைச்சாவடி மற்றும் ஆறு பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

The post ஆற்றில் மூழ்கி காவலர் பலி appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Govindaraj ,Tuticorin district ,Tamil Nadu Special Police Force ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED பொது மயானத்தில் உணவு கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை