×

நில அபகரிப்பு வழக்கு கோவாவில் ரூ.39 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: கோவாவை சேர்ந்த விக்ராந்த் ஷெட்டி, முகமது சுஹைல், ராஜ்குமார் மைதி மற்றும் சிலர் கூட்டாக இணைந்து கோவா முழுவதும் சட்டவிரோதமாக நிலங்களை அபகரித்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு அபகரித்த நிலங்களை கோவா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு விற்பனையும் செய்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பல காவல்நிலையங்களில் ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன்ஒரு பகுதியாக ரூ.39.24 கோடி மதிப்புடைய 31 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

The post நில அபகரிப்பு வழக்கு கோவாவில் ரூ.39 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Goa ,Enforcement ,New Delhi ,Vikrant Shetty ,Mohammed Suhail ,Rajkumar Maithi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி நாளை தமிழகம்...