×

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பணி தேர்வு முடிவு நாளை வெளியீடு

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பணி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தேர்வு எழுதியவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் www.arasubus.tn.gov.in வழியாக இணையதளத்தில் 27ம் தேதி(நாளை) காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும். விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உபயோகித்து ஓஎம்ஆர் விடைத்தாளை சரிபார்த்துக் கொள்ளலாம். இதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பின் போது கல்வி தகுதி, வயது, சாதி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம், உடல் தகுதி ஆகியவற்றில் தகுதியானவர்கள் மட்டுமே ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.

The post போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பணி தேர்வு முடிவு நாளை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,CHENNAI ,Government Rapid Transport Corporation ,Dinakaran ,
× RELATED பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள்...