×

கடந்த வாரம் சென்று வந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லிக்கு அவசர பயணம்

சென்னை: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை, நீண்ட காலமாக ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதனால் கவர்னர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டது. அதற்கு பதில் அளிக்க கவர்னர் தரப்பில் அவகாசம் கேட்கவே. விசாரணை வரும் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை 5.15 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் சென்றனர். டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. கவர்னர் ரவி ஏற்கனவே கடந்த 19ம் தேதி டெல்லி சென்று மறுநாள் திரும்பினார். மீண்டும், அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கடந்த வாரம் சென்று வந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லிக்கு அவசர பயணம் appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Governor RN Ravi ,
× RELATED புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில்...