×

இயற்கை எரிவாயுவுடன் அழுத்தப்பட்ட உயிர்வாயு கலப்பு கட்டாயம்: ஒன்றிய அரசு

புதுடெல்லி: உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கவும்,இயற்கை எரிவாயு இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்கவும்,2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் இயற்கை எரிவாயுவுடன் அழுத்தப்பட்ட உயிர்வாயுவைக் கலப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் 2025 ஏப்ரல் முதல் ஆட்டோ மொபைல் வாகனங்கள், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவில் உயிர் வாயு முதலில் 1 சதவீதம் கலக்கப்படும்.

அதன் பின்னர் 2028ம் ஆண்டுக்குள் அது 5 சதவீதமாக அதிகரிக்கப்படும். உலகின் மிக பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளர்களில் ஒன்றான இந்தியா ஒட்டுமொத்த எரிவாயு நுகர்வில் பாதியை ஏற்றுமதி செய்து அதன் இறக்குமதி செலவை குறைக்க விரும்புகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இயற்கை எரிவாயுவுடன் அழுத்தப்பட்ட உயிர்வாயு கலப்பு கட்டாயம்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான...