×

மோடி பாதுகாப்பில் குறைபாடு பஞ்சாப் எஸ்.பி சஸ்பெண்ட்

சண்டிகர்: பிரதமர் மோடி கடந்த ஆண்டு பஞ்சாப் சென்றபோது பாதுகாப்பு குறைபாடுகளால் அவரது கார் பயணத்தை தொடர முடியாமல் திரும்பினார். இந்த சம்பவம் குறித்த விசாரணையில் கடந்த புதனன்று பதின்டா எஸ்.பி. குர்பிந்தர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு 2022 பிப்ரவரியில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதையொட்டி ஜனவரி 5ல் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பெரோஸ்பூர் வழியாக காரில் சென்றார்.

அப்போது அவரது வருகையை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ஒரு மேம்பாலத்தில் 20 நிமிடங்களாக அவரது கார் நின்று விட்டு, போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் மேற்கொண்டு பயணத்தை தொடராமல் டெல்லி திரும்பினார். பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை விசாரிக்க ஜனவரி 12ல் 5 பேர் கமிட்டியை உச்சநீதிமன்றம் நியமித்தது.

அது மாவட்ட எஸ்.பி. தனது கடமையை செய்யவில்லை என்று குற்றம் சாட்டியது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 18ல் பஞ்சாப் டி.ஜி.பி மாநில உள்துறையிடம் பெரோஸ்பூர் எஸ்.பி தனது கடமையை சரிவர செய்யவிலை என்று அறிக்கை அளித்தார். அதையடுத்து அப்போது பெரோஸ்பூர் எஸ்.பியாக இருந்த குர்பிந்தர் சிங்கை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து பஞ்சாப் உள்துறை உத்தரவிட்டது.

The post மோடி பாதுகாப்பில் குறைபாடு பஞ்சாப் எஸ்.பி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Modi ,Punjab SP ,Chandigarh ,Punjab ,Dinakaran ,
× RELATED சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த...