×

தெலங்கானாவில் நவ.30ம் தேதி வாக்குப்பதிவு ஒரே நாளில் மோடி, ராகுல் பிரசாரம்: அமித்ஷா, கார்கே, ஜே.பி. நட்டா, பிரியங்காவும் ஓட்டு வேட்டை

திருமலை: தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா, ஜேபி. நட்டா, பிரியங்கா, கார்கே ஆகியோர் முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டார்கள். தெலங்கானாவில் நவ.30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு இறுதிகட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா, பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டார்கள்.

துக்குகுடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “கே.சி.ஆரின் ஊழல் மற்றும் திறமையற்ற ஆட்சியால் தெலுங்கானா மாநிலம் எட்டியிருக்க வேண்டிய நிலையை எட்டவில்லை. காங்கிரஸ் கட்சியும், பிஆர்எஸ் கட்சியும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். கே.சி.ஆரின் அரசியல் வாழ்க்கை காங்கிரசில் இருந்து தொடங்கியது. குடியரசுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்களில் காங்கிரசுக்கு பிஆர்எஸ் ஆதரவு அளித்தது. மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் காங்கிரசுக்கு, பிஆர்எஸ் ஆதரவு அளித்துள்ளது. காங்கிரசும், பிஆர்எஸ்சும் ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்.

கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் எதுவும் நடக்கவில்லை” என்று அவர் பேசினார். அடிலாபாத் இந்திரா பிரியதர்ஷினி மைதானத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “தெலங்கானா மாநில பிரிவினையின் போது நிதிமிகை மாநிலமாக வழங்கினோம். ஆனால், கேசிஆர் ஆட்சியில் தெலங்கானா கடன் மாநிலமாக மாறியது. தனி தெலங்கானா போராட்ட இயக்கத்தின் உரிமைகளுக்கு எதிராக கேசிஆர் ஆட்சி நடத்துகிறார். மக்களின் கனவுகளும், உரிமைகளும் நிறைவேற்றப்படவில்லை. 100க்கும் மேற்பட்ட மக்களின் தியாகத்தால் தெலங்கானா உருவானது.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காங்கிரஸ் தெலங்கானா மாநிலத்தை வழங்கியது. நிதிமிகை மாநிலமாக உருவான தெலங்கானா, 10 ஆண்டுகால கே.சி.ஆர் ஆட்சியில் கடனில் முழ்கியது’’ என்று அவர் பேசினார். தெலங்கானாவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷா பேசியதாவது: தெலங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கே.சி.ஆர் அரசின் ஊழல் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவோம். அரசியல் சாசனத்திற்கு எதிராக 4 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவை நீக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தெலங்கானாவில் நவ.30ம் தேதி வாக்குப்பதிவு ஒரே நாளில் மோடி, ராகுல் பிரசாரம்: அமித்ஷா, கார்கே, ஜே.பி. நட்டா, பிரியங்காவும் ஓட்டு வேட்டை appeared first on Dinakaran.

Tags : Telangana ,Modi ,Rahul ,Amit Shah ,Kharge ,JP Nata ,Priyanka ,Tirumala ,JP ,Nata ,Kharke ,JP Natta ,
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...