×

காகித பாக்கெட் மது விற்பனை எண்ணத்தை கைவிட வேண்டும்: அன்புமணி, ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: காகித பாக்கெட் மது விற்பனை கொண்டுவரும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி: தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். 90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இது மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ மது அருந்தினால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் மிகப்பெரிய அளவில் சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும். எனவே இதை பாமக அனுமதிக்காது. போராட்டத்தை முன்னெடுக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் : தமிழகத்தில் “டெட்ரா பேக்” மூலம் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.எக்காரணத்ததை கொண்டும் “டெட்ரா பேக்” மது விற்பனையை தமிழகத்தில் கொண்டுவரக் கூடாது என கூறியுள்ளார்.

The post காகித பாக்கெட் மது விற்பனை எண்ணத்தை கைவிட வேண்டும்: அன்புமணி, ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anbumani ,GK Vasan ,CHENNAI ,Bamaka ,president ,Tamaka ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்