×

ஐஎஸ்எல் கால்பந்து ஈஸ்ட் பெங்காலுடன் சென்னையின் எப்சி டிரா

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில், ஈஸ்ட் பெங்கால் எப்சி அணியுடன் மோதிய சென்னையின் எப்சி அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியின் 29வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் அடித்த பந்து சென்னையின் எப்சி வீரர் ஆயுஷ் அதிகாரியின் காலில் பட்டு ‘ஓன் கோல்’ ஆக அமைய, ஈஸ்ட் பெங்கால் 1-0 என முன்னிலை பெற்றது.

இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. 2வது பாதியில் சென்னையின் எப்சி தாக்குதலை தீவிரப்படுத்த.. 86வது நிமிடத்தில் கிரிவெல்லரோ துல்லியமாகப் பாஸ் செய்த பந்தை குமெந்தம் மீத்தெய் அபாரமாக கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணி வீரர்களும் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதையடுத்து ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

* சென்னை அணியில் முதல் முறையாக ‘பிளேயிங் லெவனில்’ உள்ளூர் வீரர் அஜித் குமார் இடம் பெற்றார். மற்றொரு தமிழக வீரர் ரொமாரியோ ஜேசுராஜ் பதிலி ஆட்டக்காரர்கள் பட்டியலில் இருந்தார்.

* தமிழ்நாடு வீரர் நந்தகுமார் பதிலி ஆட்டக்காரராக ஈஸ்ட் பெங்கால் அணியில் இடம் பிடித்திருந்தார்.

* முரட்டு ஆட்டம் ஆடியதால் 2வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற சென்னை வீரர் கிறிஸ்டோபர், சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். அதனால் கடைசி ஒரு நிமிடம் சென்னை அணி 10 வீரர்களுடன் விளையாடியது.

The post ஐஎஸ்எல் கால்பந்து ஈஸ்ட் பெங்காலுடன் சென்னையின் எப்சி டிரா appeared first on Dinakaran.

Tags : ISL Football ,Chennaiyin FC ,East Bengal ,Chennai ,Chennai FC ,East Bengal FC ,ISL ,Dinakaran ,
× RELATED சென்னையின் எப்சி அபாரம்