×

சில்லிபாயின்ட்…


* யு-19 ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டிச. 8 முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உதய் சஹாரன் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா யு-19 அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் டிச.8ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

* திருவனந்தபுரத்தில் இதுவரை 3 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. முதலில் பேட் செய்த அணிகள் 67/5 (8 ஓவர் போட்டி), 170/7, 106/8 என ரன் குவிக்கத் திணறியுள்ளன.

* ஐபிஎல் தொடரின் கடந்த 2 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளார்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் பின்லாந்து அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்று தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. செர்பியா – இத்தாலி அணிகளிடையே நடக்கும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் ஆஸ்திரேலியா நாளை இறுதிப் போட்டியில் மோதும்.

* அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி டிச.3ம் தேதி ஆன்டிகுவாவில் நடைபெறும்.

The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : U ,-19 ,Men's ,Asia Cup Cricket Tournament Series ,UAE ,Silly ,Dinakaran ,
× RELATED உ.பி.யில் ஆர்ஓ, ஏஆர்ஓ தேர்வுகள் ரத்து