×

இலகு ரக படகுப் போட்டி தங்கம் வென்ற ரித்திகா, ரக்‌ஷயா

ஐதராபாத்: இந்திய படகோட்டுதல் விளையாட்டு கூட்டமைப்பு(ஆர்எப்ஐ) சார்பில் தேசிய அளவிலான 24வது சப்-ஜூனியர் படகோட்டுதல் போட்டி (நவ. 17-23) ஐதராபாத்தில் நடந்தது. இப்போட்டியில் தமிழ்நாடு சார்பில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மகளிர் இரட்டையர் இலகுரக படகோட்டுதல் (எஸ்ஜி2எக்ஸ்எப்1) பிரிவு இறுதி சுற்றுக்கு தமிழ்நாடு, அரியானா, மேற்கு வங்கம், கேரள அணிகள் தேர்வு பெற்றன.

இறுதி சுற்றின் முடிவில் பந்தய இலக்கான 500 மீட்டரை தமிழக வீராங்கனைகள் எல்.ரித்திகா, எஸ்.ரக்‌ஷயா ஆகியோர் 2 நிமிடம், 2 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். இப்பிரிவில் மேற்கு வங்க அணி (2 நிமிடம், 3.7 விநாடி) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், 2 நிமிடம் 4.6 விநாடிகளில் இலக்கை கடந்த கேரளா அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.

மகளிர் ஒற்றையர் பிரிவில் (சிடபிள்யூ1எக்ஸ்எப்1) மற்றொரு தமிழ் நாடு வீராங்கனை கே.பிரிதியுஷா 500 மீட்டர் தொலைவை 2 நிமிடம், 10.5 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த பிரிவில் தெலுங்கானாவின் கீர்த்தி ராம் வெள்ளி, சண்டீகரின் பிரியங்கா குமாரி வெண்கலமும் கைப்பற்றினர்.

The post இலகு ரக படகுப் போட்டி தங்கம் வென்ற ரித்திகா, ரக்‌ஷயா appeared first on Dinakaran.

Tags : Ritika ,Rakshaya ,Hyderabad ,24th ,National Rowing Federation of India ,RFI ,National Sub-Junior Rowing Competition ,
× RELATED ஹைதராபாத்தில் திருமணத்திற்கு முன்பு...