×

ஆம்னி பஸ், அரசு பேருந்து விபத்தில் சிக்கி 34 பேர் காயம்

சென்னை: சென்னையில் இருந்து கார்த்திகை தீபத்திற்காக சிறப்பு அரசு பேருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலை நோக்கி நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். செஞ்சியை அடுத்த களையூர் கிராமம் அருகே வந்தபோது, திடீரென முன்னாள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் பேருந்தை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பாலத்தின் கட்டையின் மோதி பள்ளத்தில் தொங்கியவாறு நின்றது. இதில் 18 பயணிகள் படுகாயமடைந்தனர். பேருந்து ஓட்டுனர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் பேருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர். விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post ஆம்னி பஸ், அரசு பேருந்து விபத்தில் சிக்கி 34 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Karthigai Deepa ,Senchi ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை...