×

எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன்.. சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டம்!!

சென்னை: சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மணிப்பூர் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதாக கூறி, எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு நபர் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த குஷ்பூ, தங்களைப்போல், சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று பதிவிட்டிருந்தார். அவரின் அந்தப் பதிவில், ‘சேரி மொழி’ என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். எந்த இடத்திலும் நான் தகாத வார்த்தையை பயன்படுத்துவது இல்லை என்றும், எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன், ஊர் பெயர்களிலும் சேரி என்ற பெயர் உள்ளது என்றும் அவர் கூறினார். என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வருவதாக கூறினார்கள், ஆனால் வரவில்லை, நான் காத்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்தார்.

மணிப்பூர் கலவரம் பற்றி குஷ்பு மழுப்பல் பதில்
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான கேள்விக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். வீராங்கனைகளின் புகாரில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்த கேள்விக்கு குஷ்பு மழுப்பலாக பதில் அளித்தார். மேலும், மகளிர் ஆணைய நடவடிக்கைகளை எல்லாம் பத்திரிகையாளர்களிடம் சொல்ல வேண்டுமா என குஷ்பு செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

காயத்ரி ரகுராமுக்கு குஷ்பு கேள்வி
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தாரா எனக் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம்: காங்கிரஸ் திட்டவட்டம்
சென்னையில் உள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம் என்று
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் குஷ்பு மன்னிப்பு கேட்கும் வகையில் காங்கிரஸ் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன்.. சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Chari ,National Women's Commission ,Kushpu Shyvatam ,Chennai ,Kushpu ,Saree ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் ஒட்டுமொத்த...