×

“சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது”: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டம்

சென்னை: சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். எந்த இடத்திலும் நான் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை. எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன், ஊர் பெயர்களிலும் சேரி என்ற பெயர் உள்ளது. என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வருவதாக கூறினார்கள், ஆனால் வரவில்லை; நான் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

The post “சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது”: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,Khushbu Scheme ,Chennai ,Khushpu ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...