×

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மண்டலத்திலும் சர்வதேச பள்ளி அமைக்கப்படும்

*பிரியங்கா காந்தி பேச்சு

திருமலை : தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மண்டலத்திலும் சர்வதேச பள்ளி அமைக்கப்படும் என பிரியங்கா காந்தி பேசினார்.தெலங்கானா மாநிலம், மெகபூபாத் மாவட்டம் தோரூரில் நேற்று காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதாரித்து பேசியதாவது: தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டிற்கும் ₹400 சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ₹2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும். அரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ₹500 போனஸ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ₹15 ஆயிரம், விவசாய கூலிகளுக்கும் ஆண்டுக்கு ₹12 ஆயிரம் வழங்கப்படும். வேலையில்லாதவர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தருவோம். காங்கிரஸ் ஆளும் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு பிரத்யேகமாக வேலை (ஜாப்) காலண்டர் வெளியிட்டு நிரப்பப்படும். தெலங்கானா மாநில தேர்வாணையத்தின் வினாத்தாள் முன்கூட்டிய வெளியானதால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு மண்டலத்திலும் சர்வதேச பள்ளி அமைக்கப்படும். காங்கரஸ் அளித்த 6 உத்திரவாதங்களோடு இவை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். மாற்றம் வேண்டும் காங்கிரஸ் வர வேண்டும் என்பதே நம் முழக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

The post தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மண்டலத்திலும் சர்வதேச பள்ளி அமைக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Congress ,Telangana ,Priyanka Gandhi ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆபரேஷன்...