×

வாரத்தின் இறுதி நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.46,000ஐ தாண்டியது!!

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வந்தது. அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதி ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.360 வரை குறைந்து, ஒரு சவரன் ரூ.45,800க்கு விற்கப்பட்டது. விலை சரிவால் தீபாவளி பண்டிகை நாட்களில் தங்கம் விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்து காணப்பட்டது..தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. சில தினங்களில் பெயரளவுக்கு மட்டும் குறைந்தும் வந்தது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

The post வாரத்தின் இறுதி நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.46,000ஐ தாண்டியது!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Diwali ,Diwali festival ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...