×

திருப்பூர் அருகே தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அதிமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கவுன்சிலர் பழனிசாமி, நாகரத்தினம், தனசேகரன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பாதையை பயன்படுத்தியதால் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அதிமுக கவுன்சிலரும், காங்கேயம் ஒன்றிய அவைத் தலைவருமான பழனிசாமி மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

The post திருப்பூர் அருகே தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tirupur ,Kangeyam ,
× RELATED மாநகராட்சிக்கு வரி செலுத்தாத பிரபல ஓட்டல் கட்டிடத்திற்கு சீல்