×

என்னால் மன்னிப்பு கேட்க முடியாது : பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

சென்னை : என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்!,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post என்னால் மன்னிப்பு கேட்க முடியாது : பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,BJP ,state president Annamalai ,Chennai ,Tamil Nadu ,President Annamalai ,State ,President ,Annamalai ,
× RELATED மாற்றி பேசுவது பிரதமர் மோடிக்கு...