×

கோத்தகிரி மலைப்பாதையில் மண்சரிவுகளை அகற்றும் பணி தீவிரம்

கோத்தகிரி : கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை பகுதியில் மூன்றுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சாலையில் விழுந்துள்ள மண்சரிவு போன்ற இடர்பாடுகளையும்,சாலையில் விழுந்துள்ள ராட்சத பாறைகளை உடைத்தும் அப்புறப்படுத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக கோத்தகிரி,குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிக பாதிப்பு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குஞ்சப்பனை பகுதியில் ஏற்ப்பட்டது.

இந்நிலையில் குஞ்சப்பனை பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் மூன்றுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் ஏற்ப்பட்ட மண்சரிவுகளை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர்.மேலும் சாலையில் விழுந்துள்ள ராட்சத பாறைகளை இயந்திரத்தை பயன்படுத்தி உடைத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக மண்சரிவு ஏற்ப்பட்டுள்ள பகுதிகளில் ஒருசில இடங்களில் விழும் நிலையில் பாறைகள் இருப்பதால் தொடர்ந்து மழையின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

The post கோத்தகிரி மலைப்பாதையில் மண்சரிவுகளை அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kothagiri ,Mettupalayam ,Kunjapanai ,
× RELATED கோடை மழை எதிரொலி உயிலட்டி நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரிப்பு