×

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே 2 ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

*போலீஸ் விசாரணை

கோவை : கோவை கலெக்டர் அலுவலகம் அருகே 2 ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே இந்தியன் வங்கி, எஸ்பிஐ, சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று காலை இந்தியன் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம் சென்டரின் முன்பக்க கண்ணாடிக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,‘‘அடுத்தடுத்து 2 ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவு கற்களை கொண்டு வீசி உடைக்கப்பட்டுள்ளது. யாராவது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரம் பாதுகாப்பாக உள்ளது. பணம் கொள்ளை போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது’’ என்றனர்.கோவையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான பகுதியில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கோவை கலெக்டர் அலுவலகம் அருகே 2 ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Coimbatore Collector ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்