×

ஆவின் லாரி கவிழ்ந்து சாலையில் ஓடிய பால் வேலூர் அருகே

வேலூர், டிச.25: வேலூர் அருகே ஆவின் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கட்டு வட்டாரங்களில் கொள்முதல் செய்து பாலை விற்பனை செய்கிறது. இவ்வாறு நேற்று காலை கொள்முதல் செய்த பாலுடன் கீழ்அரசம்பட்டில் இருந்து பென்னாத்தூர், ஊசூர் சத்துவாச்சாரி ஆவின் நிறுவனத்துக்கு ஆவின் டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. வேலூர் அப்துல்லாபுரம்-தெள்ளூர் கூட் ரோட்டில் வேலூர் விமான நிலையம் பின்புறம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டேங்கில் இருந்து பால் சாலையில் கொட்டி ஓடியது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆவின் லாரி கவிழ்ந்து சாலையில் ஓடிய பால் வேலூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Aa ,Vellore ,Aavin ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...