×

ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

திருச்செங்கோடு, நவ.25: திருச்செங்கோடு சிஹெச்பி காலனியில் உள்ள ஐயப்பன், கணபதி, மஞ்சமாதா, கருத்தசாமி, கருப்பசாமி, கருப்பாயி, நாகராஜா ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை சபரிமலை பிரதான தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு ராஜீவரு, இளைய தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு பிரம்மதத்தன் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அறங்காவலர் ராஜேஷ்வரன் தலைமையிலான குழு செய்திருந்தனர். நேற்று மங்கல வாத்தியங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. சபரிமலை தந்திரிகள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிசேக நிகழ்ச்சிகளையும் சிறப்பு பூஜைகளையும் நடத்தினர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பாலக்காடு உண்ணி குழுவினரின் கேரள செண்டை மேளத்துடன் நான்கு ரத வீதிகளில் சுவாமி ஐயப்பன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலமாக வந்தார். இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

The post ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Ayyappan temple ,Kumbabhishekam ,Tiruchengode ,Ayyappan ,Ganapati ,Manjamata ,Sessamy ,Karuppasamy ,Karuppai ,Nagaraja ,CHP Colony ,Ayyappan Temple Kumbabishek ceremony ,
× RELATED தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்