×

40 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்

பாப்பாரப்பட்டி, நவ.25: பாப்பாரப்பட்டி பகுதியில் தடையை மீறி பயன்படுத்திய, 40 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ேகாமதி அம்மாள் தலைமையில், அதிகாரிக்ள மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் தள்ளுவண்டி கடைகள், நடைபாதை காய்கறி கடைகள், பலகார கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் தடையை மீறி பயன்படுத்திய 40 கிலோ கேரி பேக்குகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்து, ₹1500 அபராதம் விதித்தனர். மேலும், கேரி பேக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post 40 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Paparapatti ,Dinakaran ,
× RELATED பாப்பாரப்பட்டியில் ராகி விளைச்சல் அமோகம்