×
Saravana Stores

பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதி மருந்து, மாத்திரைகள் மூட்டை மூட்டையாக குவிப்பு

*அதிகாரிகள் விசாரணை

பாப்பாரப்பட்டி : பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதி மருந்து, மாத்திரைகள் மூட்டை மூட்டையாக குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பெரிய ஏரி பகுதியில் பனைகுளம் செல்லும் சாலை செல்கிறது. இந்த சாலையில் பெரிய ஏரியின் புதருக்குள், 6 சாக்கு மூட்டைகள் கிடந்தது. அந்த சாக்கு முட்டைகளில் மருந்து பாட்டில்கள் இருந்தது. பல மருந்து பாட்டில்கள் சிதறி, குவியல் குவியலாக கிடந்தது.

டானிக், மாத்திரைகள் என சிதறிக் கிடந்தது. அந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியானது என்பது தெரியவந்தது. பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருந்து கடைகள் அல்லது மொத்த ஏஜென்சிகள் யாராவது காலாவதி மருந்துகளை மூட்டைக்கட்டி எடுத்து வந்து, வீசி சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து பாப்பாரப்பட்டி சுகாதார ஆய்வாளர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதியான மருந்துகள் அடங்கிய பாட்டில்களையும், மாத்திரைகளையும் வீசிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், மருந்து கடைகள் தற்றும் தனியார் மருத்துவமனைகளில் விசாரித்து வருகிறோம். நீர்நிலைகள், பொது இடங்களில் காலாவதி மருந்துகளை கொட்டக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மூட்டை மூட்டையாக காலாவதியான மருந்து பாட்டில்களை வீசிச் சென்றுள்ளவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

The post பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதி மருந்து, மாத்திரைகள் மூட்டை மூட்டையாக குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Paparapatti ,Panaikulam ,Periya Lake ,Dharmapuri district ,
× RELATED திருமணமான பெண் மாயம்