×

இனுங்கூர் ஊராட்சி புதுப்பட்டியில் பாதியில் நிற்கும் சிமெண்ட் சாலை பணி

 

குளித்தலை, நவ.25: இனுங்கூர் ஊராட்சி புதுப்பட்டியில் பாதியில் நிற்கும் சிமெண்ட் சாலைப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சி புதுப்பட்டி குடித்தெரு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி 2022-23ம் ஆண்டிற்கான 15 வது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து சிமெண்ட் சாலை பணி பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் பணி முழுமை பெறாமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து பாதியில் நிற்கும் சிமெண்ட் சாலை பணிகள் முழுமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இனுங்கூர் ஊராட்சி புதுப்பட்டியில் பாதியில் நிற்கும் சிமெண்ட் சாலை பணி appeared first on Dinakaran.

Tags : Inungur Panchayat Pudhupatti ,Kulithalai ,Dinakaran ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...