×

அஞ்சுகிராமம் அருகே பைக் மீது மினி டெம்போ மோதி ஓட்டல் தொழிலாளி பலி

அஞ்சுகிராமம், நவ.25: சுசீந்திரம் தாணுமாலயன் நகரை சேர்ந்தவர் சிவா (49). பரோட்டா மாஸ்டர். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவா பைக்கில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். வட்டக்கோட்டை விலக்கு பகுதியில் வந்தபோது, பின்னால் வேகமாக வந்த மினி டெம்போ, திடீரென சிவா ஓட்டி சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவா தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவா மனைவியின் அக்கா பகவதியம்மாள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பைக்கில் மோதி விபத்து ஏற்படுத்திய மினி டெம்போவை ஓட்டிவந்த கோவை மாவட்டம் மணியக்காரபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ் (24) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அஞ்சுகிராமம் அருகே பைக் மீது மினி டெம்போ மோதி ஓட்டல் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Anjugram ,Siva ,Suchindram Thanumalayan ,Parotta ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி அருகே பெண்ணுக்கு...