×

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 

அரியலூர்,நவ.25: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (துணைபயிற்சி நிலையம்) 2023-24ம் ஆண்டு 23 வது அஞ்சல் வழி/ பகுதி நேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் துவங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் WWW,tnculcm,com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.100 ஐ இணைய வழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான விளம்பரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் WWW,tnculcm,com என்ற இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அணுகி விபரங்களை அறிந்து கொள்ளலாம். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூட்டுறவு சங்கங்களின் அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Lalgudi Cooperative Management Center ,Tamil Nadu Cooperative Union ,Perambalur ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை