×

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக மரபு வார விழா

 

ஜெயங்கொண்டம்,நவ.25: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் 5வது நாட்களாக நடைபெறும் உலக மரபு வார விழாவை வெளிநாட்டினர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று கண்டு ரசித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வார விழா நேற்று ஐந்தாவது நாளாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலக பாரம்பரிய புராதன சின்னம் என யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணைந்து உலக மரபு வார விழா நடைபெற்று வருகிறது. விழா நேற்று 5வது நாளாக உலக மரபு வார விழா நடைபெற்றது. தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை புகைப்பட கண்காட்சி மற்றும் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து கலை மற்றும் பண்பாட்டு துறை நேற்று மாலை 4 மணி முதல் சிவன், பார்வதி உள்ளிட்ட வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகள் மற்றும் பரதநாட்டியம் நடைபெற்றது. அதனை பள்ளி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலம் கண்காணிப்பாளர் அணில் குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், முதுநிலை செயலக உதவியாளர் மாரிமுத்து, கட்டிட பராமரிப்பு உதவியாளர் சீதாராமன், தமிழ்நாடு தொல்லியல் துறை அலுவலர் பிரபாகரன், மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக மரபு வார விழா appeared first on Dinakaran.

Tags : World Heritage Week Festival ,Gangaikonda Cholapuram ,Jeyangondam ,
× RELATED காமதகனமூர்த்தி