×

சில்லி பாயின்ட்…

* இந்திய அணி அடுத்த மாதம் தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி டிச.10ல் டர்பனில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் டிச.26ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், மூத்த வீரர்கள் ஆர்.அஷ்வின், அஜிங்க்யா ரகானே, ஜெய்தேவ் உனத்கட் மற்றும் இளம் வீரர்கள் அடங்கிய இந்தியா ஏ அணி தென் ஆப்ரிக்கா சென்று 3 டெஸ்ட் (4 நாள் போட்டிகள்) போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
* சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர், நேரடியாக ஸ்டேடியங்களுக்கு வருகை தந்த ரசிகர்கள், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு, இணையதளம்/ஆப் டிஜிட்டல் ஒளிபரப்பு என அனைத்து வகையிலும் அதிக பார்வையாளர்களை ஈர்த்த தொடராக புதிய சாதனை படைத்துள்ளது. மொத்தம் 48 போட்டிகளை ஸ்டேடியங்களில் பார்த்து ரசித்த ரசிகர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 50,307 என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் (பிப். 2024) பங்கேற்க முடியாது என, இந்திய அணியின் ஒற்றையர் பிரிவு முன்னணி வீரர்கள் சுமித் நாகல், சசிகுமார் முகுந்த் இருவரும் கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக ஏஐடிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் இமத் வாசிம் (34 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் 986 ரன் மற்றும் 44 விக்கெட்; 66 டி20 போட்டிகளில் 486 ரன் மற்றும் 65 விக்கெட் எடுத்துள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : South Africa ,Dinakaran ,
× RELATED சிக்சர் மழையில் சாதனை