×

பொன்னமராவதி அருகே மார்பக புற்றுநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாம்

 

பொன்னமராவதி,நவ.25: பொன்னமராவதி தாலுகா கொன்னைபட்டி ஊராட்சியில் மார்பக புற்றுநோயை முன்கூட்டி கண்டறியும் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவ முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தொடங்கி வைத்தார். இம்மருத்துவ முகாமிற்கு அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மைய திட்ட மேலாளர் வெங்கடேஷ், மருத்துவர்கள் பிரீனா, ஆறுமுககுமரன் ஆகியோர் கலந்து கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கொடுத்துள்ளனர்.

விழிப்புணர்வு முகாமில் போதை பொருளுக்கு அடிமையான ஆண்களை மீட்டெடுப்பது மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப வாய் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் விதமாக சுய பரிசோதனை செய்து கொள்ளும் முறை பற்றியும் மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமிற்கு ஊராட்சி சேர்ந்த கிராமமான கொன்னைபட்டி, மூலங்குடி, ஊத்தங்காடு, புதுவளவு, தச்சம்பட்டி, வெங்கல மேடு பகுதியைச் சேர்ந்த கிராமப் பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஊராட்சி செயலர் கோபால், ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசுந்தரி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post பொன்னமராவதி அருகே மார்பக புற்றுநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Konnaipatti ,Ponnamaravati taluka.… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை