×

முத்துப்பேட்டையில் வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா

 

முத்துப்பேட்டை, நவ.25: முத்துப்பேட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் புதிய வட்டக் கிளை துவக்க விழா மற்றும் வைரவிழா மாநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு துணை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். முன்னதாக வட்டாட்சியர் அலுவலகம் வாசலில் சங்க கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் புதிய வட்டக் கிளை தலைவராக கஜேந்திரன், வட்டச் செயலாளராக பன்னீர்செல்வம்,

பொருளாளராக வீரபாண்டியன், துணை தலைவராக காளிமுத்து, இணை செயலாளராக தமிழ்பிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினராக சுபராஜ் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை பாராட்டி மாநில பொருளாளர் சோமசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். மேம்படுத்தப்பட்ட ஊதியம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் மகேஷ். மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட நிர்வாகிகள்,கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் மற்றும் வட்ட ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா appeared first on Dinakaran.

Tags : Diamond Festival of Revenue Officers ,Association ,Muthuppet ,Tamil Nadu Revenue Officers Association ,Muthupettai ,Revenue Officers Association ,Diamond Jubilee ,
× RELATED முத்துப்பேட்டையில் வருவாய்த்துறை...