×

பாமணி ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 

திருத்துறைப்பூண்டி,நவ.25: தமிழ்நாடு அரசு கால்நடை பாரமரிப்புத்துறை தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு திட்டத்தின் கீழ் 4வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம் மற்றும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூ உத்தரவின் பேரில் கால்நடை பாரமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, உதவி இயக்குனர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி பாமணி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.

மருத்துவர்கள் சந்திரன், காவியா, கீர்த்தனா, மோகனப்பிரியா, கால்நடை ஆய்வாளர்கள் முருகானந்தம், முருகுபாண்டியன், சாந்தி, முருகேஷ், கால்நடை உதவியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் 600 மாடு, ஆடு, கோழிகளுக்கு சிகிச்சையளித்து மருந்து மாத்திரை வழங்கினர். மழை காலத்தில் கால்நடைகளை எப்படி பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.

மேலும் சிறந்த கால்நடை வளர்ப்போர்களுக்கு மூன்று பரிசு வழங்கப்பட்டது. மேலும் தாது உப்பு வழங்கப்பட்டது. முகாமை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் ஆய்வு செய்து வரும் 30ம் தேதியுடன் முகாம் நிறைவுபெறுகிறது எனவே விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டுவந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.

The post பாமணி ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Livestock ,awareness ,Bamani panchayat ,Tirutharapoondi ,Tamilnadu Government Veterinary Department ,Livestock Health Awareness ,Camp ,Dinakaran ,
× RELATED அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன்...