×

17வது இந்தியா – நேபாள ராணுவ கூட்டு பயிற்சி: உத்தரகாண்டில் தொடங்கியது

புதுடெல்லி: இந்தியா – நேபாள ராணுவ வீரர்கள் பங்கேற்கும் ராணுவ கூட்டுப் பயிற்சி உத்தரகாண்டில் நேற்று தொடங்கியது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகரில் நேற்று முதல் டிசம்பர் 5ம் தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஒத்திகை நடக்க உள்ளது. இது ஆண்டுதோறும் இரு நாடுகளிலும் மாறி, மாறி நடத்தப்படும் ஆண்டு பயிற்சி. இந்த ஆண்டுக்கான பயிற்சியில், 354 வீரர்களை கொண்ட இந்திய ராணுவ பிரிவு குமாவுன் படைப்பிரிவை சேர்ந்த பட்டாலியன் தலைமையில் செயல்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் 334 நேபாள ராணுவ வீரர்கள் நேற்று இந்தியா வந்தடைந்தனர்.

மலைப்பிரதேசங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், காடுகளில் போரிடுதல், அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தின்கீழ் பேரிடர் நிவாரண உதவி, மனிதாபிமான உதவிகளை ஒருவருக்கொருவர் உதவி செய்வதை மேம்படுத்துதல் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியின் நோக்கமாகும். ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது, ஆளில்லா விமானங்களை தடுத்தல், விமான பயிற்சி, மருத்துவம் பயிற்சி, சுற்றுச்சூழல் காத்தல் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், சூர்ய கிரண் 17வது கூட்டு ராணுவ பயிற்சி இந்தியா, நேபாளம் இடையே நிலவும் நட்பு, நம்பிக்கை, கலாச்சார இணைப்புகளின் பொதுவான பிணைப்பை குறிக்கிறது. பரந்த ஒத்துழைப்பை நோக்கிய இருநாடுகளின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வௌிப்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 17வது இந்தியா – நேபாள ராணுவ கூட்டு பயிற்சி: உத்தரகாண்டில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : 17th ,India ,Nepal Army ,Exercise ,Uttarakhand ,New Delhi ,Nepal ,Dinakaran ,
× RELATED உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை