×

மேட்டுப்பாளையம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

 

மேட்டுப்பாளையம், நவ.25: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் பட்டியல் திருத்தம் 2024 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி, ரோசரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் சங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் பணிகள் மேற்கொள்வது குறித்து அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில் வடிவு, வட்டாட்சியர் சந்திரன், நகராட்சி கமிஷனர் அமுதா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாலமுருகன், நகராட்சி அலுவலர்கள் ஆரிப் உல்லா, ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, சகோதரி குழந்தை தெரேசா, வாக்குச்சாவடி நிலை அலுவலர் அமராவதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post மேட்டுப்பாளையம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Election Commission of India ,Constituency Polling ,Dinakaran ,
× RELATED உதயசூரியன் சின்னத்தில்...